முதுகில் 4 முறை கத்திக்குத்து… குழந்தையை தவிக்க விட்டுவிட்டு துடிதுடித்து உயிரிழந்த இளம் விமானப் பணிப்பெண்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!! – cinefeeds
Connect with us

CRIME

முதுகில் 4 முறை கத்திக்குத்து… குழந்தையை தவிக்க விட்டுவிட்டு துடிதுடித்து உயிரிழந்த இளம் விமானப் பணிப்பெண்… நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..!!

Published

on

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தனது தாய்வீட்டிற்கு வந்த புனேவைச் சேர்ந்த 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமானப் பணிப்பெண், மகாராஷ்டிரா எல்லைப்பகுதியில் உள்ள வைங்கங்கா நதிக்கரையில் மர்ம நபர்களால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை மாலை தனது பழைய நண்பரான ரித்தேஷ் அகர்வாலுடன் போண்டராணி கிராமத்தில் உள்ள நதிக்கரை வனப்பகுதிக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றபோது, மர்ம நபர்கள் வழிப்பறி செய்ய முயன்று வர்ஷாவின் முதுகில் 4 முறை சரமாரியாகக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

புனேவில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த வர்ஷா, 2024-ஆம் ஆண்டு சமர் சையத் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது இரண்டரை வயது மகளுடன் மத்தியப் பிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள தாய்வீட்டிற்கு வந்திருந்தார். மாலை 6 மணியளவில் வழிப்பறி மற்றும் கத்திக்குத்து நடந்ததாக ரித்தேஷ் அளித்த தகவலின் பேரில், உறவினர்கள் வர்ஷாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்; ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இந்தச் சம்பவம் வழிப்பறியால் நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனச் சந்தேகிக்கும் மகாராஷ்டிரா மாநிலம் தௌனிவாடா போலீசார், சம்பவத்தின் போது உடனிருந்த நண்பர் ரித்தேஷ் மற்றும் வர்ஷாவின் மைத்துனர் அஸ்வினி ஆகியோரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வர்ஷாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், தனது மகளின் கொலைக்கு உரிய நீதி வழங்கி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அவரது தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in