LATEST NEWS
“12 ஆண்டுகளில் 4 அணா கூட PM மோடி ஊழல் செய்யல”… ராகுல் காந்தி அவதூறு பேசுவதை நிறுத்தணும் – அமித்ஷா காட்டம்..!!
பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியில் 4 அணா அளவிற்குக் கூட எந்த ஊழலும் நடைபெறவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், பிரதமர் மோடி மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத தூய்மையான ஆட்சி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ₹12 லட்சம் கோடி அளவிற்கு ஊழல்களும், பல்வேறு மோசடிகளும் நடைபெற்றதாக அமித்ஷா குற்றம் சாட்டினார். அந்த ஊழல் ஆட்சியால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு நரேந்திர மோடியை பிரதமராகத் தேர்ந்தெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிரதமர் மோடியைப் பற்றித் தொடர்ந்து அவதூறாகப் பேசுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமித்ஷா தனது உரையில் வலியுறுத்தினார். நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பிரதமர் மீது ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
