“வேலியே பயிரை மேய்வதா..?” இரவு நேரத்தில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த கல்லூரி முதல்வர்.. அடுக்கடுக்கான புகார்களால் பாய்ந்த போக்சோ.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“வேலியே பயிரை மேய்வதா..?” இரவு நேரத்தில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த கல்லூரி முதல்வர்.. அடுக்கடுக்கான புகார்களால் பாய்ந்த போக்சோ.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டம் சண்ட்லாபூர் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பொப்பிலி ராஜேந்தர் மீது, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறிச் சென்று மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகவும், மாணவிகளின் செல்போன்களுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது முதல்வர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கல்லூரி முதல்வரின் இந்த அத்துமீறல்கள் குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, பி.வி. நரசிம்ம ராவ் கால்நடைப் பல்கலைக்கழக நிர்வாகம் மூன்று பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தியது; அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் பல்கலைக்கழகப் பதிவாளர் சரத்சந்திரா, கல்லூரி முதல்வர் பொப்பிலி ராஜேந்தரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில், தற்போது அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கல்வி வட்டாரத்திலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in