பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்..! இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலையத் தேவையில்லை – ‘எங்கிருந்தும் பதிவு’ திட்டம் அரசாணை வெளியீடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம்..! இனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அலையத் தேவையில்லை – ‘எங்கிருந்தும் பதிவு’ திட்டம் அரசாணை வெளியீடு..!!

Published

on

தமிழகத்தில் சொத்துப் பத்திரப் பதிவுகளை எளிதாக்கும் வகையில் ‘எங்கிருந்தும் பதிவு’ என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையின் மூலம் பொதுமக்கள் எங்கிருந்தபடியும் தங்களின் சொத்துப் பதிவுப் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் பத்திரத்தைப் பதிவு செய்வதற்குப் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை. விண்ணப்பதாரர்களின் ஆதார் சரிபார்ப்பு மற்றும் பயோமெட்ரிக் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேநேரம், இவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்யப்படும் பத்திரங்கள் தமிழகம் முழுவதற்கும் சென்னையில் மட்டுமே பிரத்யேகமாக அச்சடிக்கப்படும். அச்சடிக்கப்பட்ட அந்த அசல் பத்திரங்கள் தபால் (போஸ்ட்) மூலமாகப் பயனாளர்களின் வீட்டு முகவரிக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in