LATEST NEWS
எம்மாடியோ..! ஒரு வேளை மதிய உணவுக்கு ₹4,800 பில்.. 7 நாள் சம்பளம் ஒரே மணி நேரத்தில் காலி – மும்பைப் பெண்ணின் வைரல் பதிவால் வெடித்த விவாதம்..!
மும்பை பாந்த்ராவில் உள்ள உணவகம் ஒன்றில் இருவர் மதிய உணவு சாப்பிட்டதற்கு ₹4,800 பில் வந்ததாக ஷிவானி என்ற பெண் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது. இந்தத் தொகை தனது 7 நாட்களின் சம்பளத்திற்குச் சமம் என்றும், பெருநகரங்களில் வெளியில் சாப்பிடுவது தற்போது ஆடம்பரமாகிவிட்டதா என்றும் அவர் தனது X பக்கத்தில் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் பதிவைக் கண்ட இணையவாசிகளில் ஒரு தரப்பினர், ₹4,800 இருந்தால் தங்கள் வீட்டிற்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்களே வாங்கிவிடலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மும்பையில் வீட்டு வாடகை மற்றும் உணவுப் பொருட்களின் விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டதால், சாதாரண ஊழியர்கள் வாழ்வதே சிரமமாக உள்ளதாகப் பலரும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேசமயம், மற்றொரு தரப்பினர் ஆடம்பரமான உணவகங்களுக்குச் சென்றுவிட்டு விலையைக் குறை கூறுவது சரியல்ல என அப்பெண்ணை விமர்சித்து வருகின்றனர். இவ்வாறாகப் பெருநகரங்களின் வாழ்க்கைச் செலவு மற்றும் ஆடம்பர உணவகங்களின் கட்டணம் குறித்து சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துக்களுடன் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.
