“ஐயோ என் பேத்தியை காணோம்” தாய், தந்தையின் அரவணைப்பின்றி தாத்தாவின் பாசத்தில் வளர்ந்த 5 வயதுச் சிறுமி மாயம்.. மாறுநாள் காத்திருந்த அதிர்ச்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஐயோ என் பேத்தியை காணோம்” தாய், தந்தையின் அரவணைப்பின்றி தாத்தாவின் பாசத்தில் வளர்ந்த 5 வயதுச் சிறுமி மாயம்.. மாறுநாள் காத்திருந்த அதிர்ச்சி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில், தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பை இழந்து தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்த 5 வயதுச் சிறுமி ஆராத்யா, குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்ய தண்டா கிராமத்தைச் சேர்ந்த மலோத்து ரவி என்பவரின் மகள், தனது கணவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், 3 வயது முதலே சிறுமி ஆராத்யாவை அவரது தாத்தா ரவிதான் வளர்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று தாத்தா ரவியும் அவரது மனைவியும், சிறுமியைத் தங்களது சகோதரர் வீட்டில் விட்டுவிட்டு விவசாயப் பணிகளுக்காக வயலுக்குச் சென்றுள்ளனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பியபோது வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆராத்யாவைக் காணவில்லை; இதையடுத்துப் பதறிப்போன குடும்பத்தினரும் கிராம மக்களும் ஊர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

மறுநாள் அதிகாலையில் மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தியபோது, கிராமத்தின் அருகிலுள்ள குளத்தில் சிறுமி ஆராத்யாவின் உடல் மிதந்ததைக் கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி குளத்தில் விழுந்தாரா அல்லது இந்தச் சந்தேக மரணத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in