LATEST NEWS
“அமெரிக்காவில் வெடிக்கப்போகும் குண்டு..?” ஈரான் தீட்டிய ரகசியத் திட்டம்… உளவுத்துறை தகவலால் அமெரிக்காவில் உச்சக்கட்ட பதற்றம்..!
டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளைக் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறைக்கு முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த செய்திகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் லாரன் பிஸ் (Lauren Bis), அமெரிக்கா எப்போதும் மிகுந்த விழிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போன்ற எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள் முழுத் தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய சூழலில் உடனடித் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் நிலைமையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.
