LATEST NEWS
உறக்கத்திலேயே பறிபோன இரு பிஞ்சு உயிர்கள்.. விஷப் பாம்பு கடித்து 2 குழந்தைகள் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் தாய்.. கள்ளக்குறிச்சியில் சோகம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூக்கனூரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது விஷப் பாம்பு கடித்ததில், தர்ஷினி (3) மற்றும் ஜனனி (1.5) ஆகிய இரு பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த விஷப் பாம்பு மூவரையும் கடித்துள்ளது. இதில் விஷம் தலைக்கேறிய நிலையில், மூன்று வயதுச் சிறுமி தர்ஷினி மற்றும் ஒன்றரை வயதுக் குழந்தை ஜனனி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாம்பு கடித்ததில் படுகாயமடைந்த குழந்தைகளின் தாய், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
