“எழுந்து நின்றவர் மீண்டும் படுத்த படுக்கையானார்…” 2 மாதங்களாகப் போராடும் வி.எஸ். பாபு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எழுந்து நின்றவர் மீண்டும் படுத்த படுக்கையானார்…” 2 மாதங்களாகப் போராடும் வி.எஸ். பாபு.. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

Published

on

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும், வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு அவராகவே எழுந்து நிற்கும் அளவுக்கு உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொற்று தீவிரமடைந்துள்ளதால் அவர் படுத்த படுக்கையாகியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மருந்துகள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போதிலும், இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், செய்வதறியாது தவிக்கும் அவரின் குடும்பத்தினர் மிகுந்த வேதனையிலும் கண்ணீரிலும் மூழ்கியுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in