LATEST NEWS
BREAKING: பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சபிதா ஜோசப் காலமானார்..!!
கலைமாமணி விருது பெற்ற பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான சபிதா ஜோசப் (67) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். சினிமா, சமூகம், வரலாறு மற்றும் பிரபலங்களின் ஆளுமைகள் குறித்து இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெயலலிதா, ஸ்ரீதேவி, ரஜினி, கமல், விஜகாந்த், பாரதிராஜா, பாக்யராஜ், ராதிகா உள்ளிட்ட ஏராளமான சினிமா நட்சத்திரங்களை ஆரம்ப காலகட்டத்தில் நேர்காணல் செய்த பெருமைக்குரியவர் சபிதா ஜோசப் ஆவார்.
