LATEST NEWS
“என்னை உள்ளே பூட்டி வச்சிருக்கா..!” ஓயோ அறைக்குள் சென்ற 55 வயது நபர்… அடுத்த நொடி கதவைப் பூட்டிய 20 வயது பெண் செய்த காரியம்.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!
பிரபல ஓயோ ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுமார் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், 55 வயதுடைய நபர் ஒருவருடன் தனியார் ஓயோ ஹோட்டல் அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அறையில் இருவருக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் எதிர்பார்த்த நெருக்கம் ஏற்படாததால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், ஹோட்டல் அறையை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு, அந்த 55 வயது நபரை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த அறைக்குள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் தவித்த 55 வயது நபர், உடனடியாகத் தனது செல்போனில் இது குறித்து வீடியோ ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், இளம்பெண் தன்னை அறைக்குள் பூட்டி வைத்துப் பிணைக்கைதியாக அடைத்து வைத்திருப்பதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு விதமான கருத்துக்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.
