உச்சகட்ட கொடூரம்..! “குடிகாரக் கணவன் வேலைக்குப் போகமாட்டான்” 20 நாள் பச்சிளம் குழந்தையை யாருக்காவது வளர்க்கக் கொடுங்க… மருத்துவமனைக்கு வந்த தாயின் கண்ணீர் வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்..! “குடிகாரக் கணவன் வேலைக்குப் போகமாட்டான்” 20 நாள் பச்சிளம் குழந்தையை யாருக்காவது வளர்க்கக் கொடுங்க… மருத்துவமனைக்கு வந்த தாயின் கண்ணீர் வாக்குமூலம்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், குடிபோதைக்கு அடிமையான கணவர் வேலைக்குச் செல்லாததால் ஏற்பட்ட கடுமையான வறுமையின் காரணமாக, 20 நாட்களே ஆன தனது பச்சிளம் பெண் குழந்தையை வேறொரு குடும்பத்திற்குத் தத்து கொடுக்கத் தாய் ஒருவர் மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலிகாரின் ஜாகீர் நகர் பகுதியைச் சேர்ந்த சோனி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், 20 நாட்களுக்கு முன்பு ஐந்தாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எப்போதும் குடிபோதையில் இருப்பதால், ஐந்து குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் தவித்த சோனி, குழந்தையை நல்ல வசதியான குடும்பத்திடம் ஒப்படைப்பதற்காகத் தனது அண்டை வீட்டுப் பெண்ணுடன் இணைந்து ஜவான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Advertisement

மருத்துவமனை மருத்துவர் இதுகுறித்துச் சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் இரு பெண்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். குழந்தையை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், வறுமையின் காரணமாகவே நல்ல குடும்பத்தில் குழந்தை வளர வேண்டும் என நினைத்ததாகவும் தாய் விளக்கமளித்த நிலையில், குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திற்குப் (CWC) போலீசார் கடிதம் எழுதவுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in