யாருடா இவரு..? “உடம்பு முழுக்க 6.3 கிலோ தங்கம்..” மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?! மொத்த கூட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘கோல்டன் மேன்’..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாருடா இவரு..? “உடம்பு முழுக்க 6.3 கிலோ தங்கம்..” மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..?! மொத்த கூட்டத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘கோல்டன் மேன்’..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தின் குண்டா பகுதியில் நடைபெற்ற ராஜா பையா நடத்தும் ஸ்ரீராம கதை நிகழ்ச்சியில், பீகாரின் ‘கோல்டன் மேன்’ என்று அழைக்கப்படும் பிரேம் குமார் சிங் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சுமார் 6.3 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்த அவர், ரூ. 10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகைகளுடன் நிகழ்விடத்தில் தோன்றினார்.

கழுத்தில் கனமான தங்கச் சங்கிலிகள், கைகளில் வளையல்கள், மோதிரங்கள் மற்றும் ஹனுமன் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான தங்க நகைகளை அணிந்திருந்த அவரைப் பார்ப்பதற்கும், அவருடன் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்கும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அவரது தோற்றம் அங்கு வந்திருந்தவர்களிடையே பேசுபொருளாக மாறியது.

Advertisement

https://www.ndtv.com/video/gold-man-45e9116e65f34840863487fccaa7303d-199316-1194543

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள வாசுதேவ்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேம் குமார் சிங், விவசாயம் மற்றும் அரசு ஒப்பந்தத் தொழில் செய்து வருகிறார். தங்கம் சேகரிக்கும் தனது தனித்துவமான ஆர்வத்தால் ‘கோல்ட்மேன் ஆஃப் பீகார்’ எனப் பிரபலமான இவர், 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட புல்லட் பைக்கையும் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in