LATEST NEWS
“சொந்த காரணங்கள் தான்… பெருசா எதுவும் இல்ல..” Guidance TN ராஜினாமா குறித்து தமிழக அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!
கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பிலிருந்து ஊழியர்கள் வெளியேறியது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், கடந்த ஜூலை மாதம் Guidance தமிழ்நாடு நிறுவனத்தில் பெருமளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்யவில்லை என அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள Guidance தமிழ்நாடு, சொந்த காரணங்களுக்காக மட்டுமே அந்த அமைப்பின் பணியாளர்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும், ஊழியர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பணியிலிருந்து விலகுவது இயல்பானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிற மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டியைத் தொடர்ந்து முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான மாநிலமாகத் தொடர்ந்து விளங்குவதாகவும் Guidance தமிழ்நாடு தெரிவித்துள்ளது.
