“உள்ளே இருந்து கேட்ட அழுகுரல்…” மகனின் சடலத்தின் அருகே 3 நாட்கள் தண்ணீர்கூட இல்லாமல் கதறி அழுத தாய்… பூட்டிய வீட்டிற்குள் நடந்த கொடூரம்..! நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உள்ளே இருந்து கேட்ட அழுகுரல்…” மகனின் சடலத்தின் அருகே 3 நாட்கள் தண்ணீர்கூட இல்லாமல் கதறி அழுத தாய்… பூட்டிய வீட்டிற்குள் நடந்த கொடூரம்..! நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

பெங்களூரு பனசங்கரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மிகவும் கொடூரமான மற்றும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகச் சௌந்தரபாண்டியன்/சுதீப் என்ற மாற்றாந்தந்தை தனது 18 வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் மனைவியைத் தாக்கிய பிறகு வீட்டிற்கு வெளியில் பூட்டுப் போட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

உயிரிழந்த மகனின் தாய் மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி வீட்டிற்குள் அடைபட்டு, கண்முன்னே கிடந்த மகனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி சுதீப் மற்றும் சீமா தாஸ் இடையே சண்டை நடப்பதாக அக்கம்பக்கத்தினர் குடியிருப்பு உரிமையாளரிடம் புகார் அளித்திருந்த நிலையில், அமைதியாக இருக்குமாறு அல்லது வீட்டைக் காலி செய்யுமாறு உரிமையாளர் எச்சரித்திருந்தார். நவம்பர் 16 இரவு வீட்டில் மீண்டும் பலத்த சண்டை நடந்து சிறிது நேரத்தில் சத்தம் அடங்கியதை அக்கம்பக்கத்தினர் வழக்கமான தகராறாகக் கருதியுள்ளனர்.

Advertisement

அன்றிரவே சுதீப் தனது 18 வயது மாற்றாந்த மகனான சோஹம் தாஸைக் கொலை செய்து, மனைவி சீமா தாஸைத் தாக்கிவிட்டு, வெளியில் கதவைப் பூட்டிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மூன்று நாட்களாகத் தாயும் மகனும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் குடியிருப்பு உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர். கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் வராததால் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சாவி செய்பவரின் உதவியுடன் பூட்டுத் திறக்கப்பட்டபோது, ஹாலில் ரத்தக்கறைகளும், குளியலறையில் சோஹம் உடலும் கிடந்தன; மற்றொரு அறையில் சீமா தாஸ் மூன்று நாட்களாகப் பட்டினி மற்றும் தாகத்தால் துடித்துக் கொண்டிருந்தார்.

அறைக்குள் இருந்து சீமா தாஸ் கதறும் சத்தம் கேட்ட காவல்துறையினர் அவரை உடனடியாகப் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பனசங்கரி காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மாற்றாந்தந்தையான சுதீப்பைக் கைது செய்துள்ளனர்; இக்கொலைக்கான முழுக் காரணத்தையும் கண்டறிய அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in