CRIME
“இது என்ன கொடுமை..” இறுதிச் சடங்கு செய்ய ஊருக்குச் சென்ற வழியில் காத்திருந்த எமன்.. அப்பளம் போல் நொறுங்கிய ஆம்புலன்ஸ்… உள்ளே இருந்த 5 பேருக்கு நேர்ந்த சோகம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்திற்கு உட்பட்ட பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த பிக்கப் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியதில் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அந்த ஆம்புலன்ஸ், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து சடலம் ஒன்றை ஏற்றிக்கொண்டு மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்று கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதலின் வேகம் மிக அதிகமாக இருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் அப்பளம் போல் நொறுங்கியதுடன், அதில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சடலத்தை அடக்கம் செய்வதற்காகச் சொந்த ஊருக்குக் கொண்டு சென்ற வழியிலேயே, ஆம்புலன்ஸில் வந்த ஐந்து பேரும் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டதோடு, உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
