“I don’t care… அவர் யாருன்னே தெரியாது.. உன் வேலைய பாருயா-ன்னு சொன்னேன்..” அமைச்சரைத் திட்டியதற்கு கோபத்துடன் விளக்கமளித்த வைகோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“I don’t care… அவர் யாருன்னே தெரியாது.. உன் வேலைய பாருயா-ன்னு சொன்னேன்..” அமைச்சரைத் திட்டியதற்கு கோபத்துடன் விளக்கமளித்த வைகோ…!!

Published

on

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் VS பாபு-வின் இறுதி ஊர்வலத்தில் நடந்த சர்ச்சை சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் விஜய், VS பாபுவின் உடலை இறுதியாக வணங்கி அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தபோது அருகில் மதிமுக தலைவர் வைகோ மற்றும் தவெக அமைச்சர்கள் தமிழன் பார்த்திபன், மரியா வில்சன், ஸ்ரீநாத், ராஜீவ் மற்றும் முதல்வரின் பர்சனல் செக்யூரிட்டி ஆகியோர் இருந்தனர். அப்போது வைகோ முதல்வர் விஜயிடம் ஏதோ பேச முற்படும்போது, போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் குறுக்கே கைவிட்டு அவரை தடுப்பது போல் நடந்து கொண்டார். உடனே வைகோ அமைச்சரை கைநீட்டி டென்ஷனாக திட்டியதுடன் கோபமாக இருப்பது போலவும் நடந்து கொண்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய் திரும்பிப் பார்த்து அமைதியாக இருக்க, அங்கிருந்த அனைவரும் நகரத் தொடங்கினர். ஒரு அமைச்சரையே இப்படி மிரட்டுவதா? என்பது போன்ற கேள்விகளும் இந்த வீடியோவால் எழுந்தன.

இந்நிலையில், மதிமுக தலைவர் வைகோ, அமைச்சர் தமிழன் பார்த்திபன் கையைப் பிடித்து இழுத்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “முதலமைச்சருக்கு நான் பாதுகாப்பு அரணாக மட்டுமே செயல்பட்டேன்” என்றும், “உன் வேலைய பாருயானு தான் சொன்னானே தவிர.. வேறு எதுவும் இல்ல” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய வைகோ, அரசியல் பின்னணி குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்தார். “திராவிட இயக்கத்திற்கு பாதுகாப்பாக இருக்க நினைத்தோம்.. ஆனால் அவர்கள் எங்களை அவமானப்படுத்தினார்கள், கட்சியே இல்லாதவர்களுக்கு சீட் கொடுத்தாங்க. எங்க சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்தபோது வைகோ அவர்களைக் கடிந்து கொண்டு கோபமாகப் பேசினார். “நான் பத்திரிகையாளர்களை மதிக்கிறேன், இப்போ போய் ‘வைகோ பத்திரிக்கையாளர்களிடம் சண்டை, பத்திரிக்கையாளர்களிடம் கோவபட்ட வைகோ’ அப்படினு எழுத போறீங்க, போடுங்க ‘I don’t care’. 62 வருட அரசியல் வாழ்க்கையில் நிறைய விமர்சனங்களை தாண்டி தான் வந்துள்ளேன்” என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

மேலும் அந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அவர், “முதல்வருடன் பாதுகாப்பாக நடந்து போகும் போது, ஒரு ஆள் என் கைய புடிச்சு இழுத்தறு, யாருன்னே தெரியல.. அவர் அமைச்சர் என்றே எனக்கு தெரியாது. ‘உன் வேலைய பாருயானு’ சொன்ன,.. இவ்வளவுதான், இதுல என்னை தவறு. நான் என்ன அடிக்க போனேனா..? தள்ளிவிட போனேனா?” என்று கேள்வி எழுப்பினார். முடிவில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்திய வைகோ, “CM தான் ‘அண்ணா நீங்க பக்கத்துலயே இருங்கனு’ சொன்னாரு. CM-யை தள்ளிவிட வந்தா.. என் ஒரு மெய்காப்பாளன் வேலையை நான் செய்வேன்” என்று கூறி தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in