LATEST NEWS
அய்யோ கடவுளே…! இப்படியா பண்ணுவாங்க… சாப்பாடு கேட்டு வந்த இளைஞர்… கொதிக்கும் சாம்பாரை முகத்தில் ஊற்றிய ஊழியர்.. அம்மா உணவகத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!
சென்னை பெரம்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உதயபானு என்பவர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல் உணவகத்திற்கு சாப்பிட வந்துள்ளார். உணவு கேட்டு வந்த இளைஞர் மீது ஊழியர் ஒருவர் கொதிக்கும் சாம்பாரை முகத்தில் ஊற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தில் சமையல் வேலைகள் முழுமையாக முடிவதற்கு முன்பே ராஜேஷ் தினமும் வந்து சாப்பாடு கேட்டுத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதே போல இன்றும் சமையல் தயாராகும் முன்பே அவர் உணவு கேட்டதால், ஊழியர் உதயபானுவிற்கும் ராஜேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த உதயபானு, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை எடுத்து ராஜேஷின் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதில் பலத்த தீக்காயமடைந்த ராஜேஷ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து, இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியர் உதயபானுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
