LATEST NEWS
“சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே..?” இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா..?” தூத்துக்குடி மாணவி கொலையால் தவெக அரசைச் சாடிய கனிமொழி..!!
தூத்துக்குடி மாவட்டம் வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை என்ற மோசமான நிலைக்குத் தமிழ்நாட்டைத் தள்ளியிருப்பதாகத் தவெக அரசை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாக மாறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள கனிமொழி, “சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் அரசு செயல்படும் விதம் குறித்து அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பு குறித்து முன்னர் பேசிய முதல்வர் விஜய்யை நோக்கி, இந்தச் சம்பவங்கள் சிறிதளவு கூட அவரை உறுத்தவில்லையா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
