LATEST NEWS
ஆட்சிக்கு வரத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமி… ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் எங்கே செல்கிறது..? செங்கோட்டையனின் ஆவேசப் பேச்சால் அதிர்ச்சி..!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், அவர் அப்பொறுப்பில் நீடிக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே எடப்பாடி பழனிசாமியிடம் காணப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த மாபெரும் இயக்கம் தற்போது எந்தத் திசையில் செல்கிறது எனப் பொதுமக்களே கேள்வி எழுப்பும் சூழல் உருவாகியுள்ளதாகச் செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதாகவும் அவர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முற்றிலும் வெவ்வேறானவர்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
