காலையில் மாயமான 3 வயதுக் குழந்தை.. இரவு பக்கத்து வீட்டு அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. வாயை மூடி மூச்சுத் திணறடித்துக் கொல்லப்பட்ட பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

காலையில் மாயமான 3 வயதுக் குழந்தை.. இரவு பக்கத்து வீட்டு அறையில் காத்திருந்த பேரதிர்ச்சி.. வாயை மூடி மூச்சுத் திணறடித்துக் கொல்லப்பட்ட பகீர் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் மூன்று வயதுப் பெண் குழந்தை மாந்திரீகச் சடங்கிற்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பக்கத்து வீட்டு அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புலந்த்ஷஹர் பகுதியைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுமி ஒருவர், காலை 11 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். குழந்தையைக் காணாமல் பதறிப்போன பெற்றோரும் உறவினர்களும் அக்கம்பக்கத்தில் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், இரவு நேரத்தில் அதே பகுதியில் வாடகை அறையில் வசித்து வரும் சோனாலி என்ற பெண்ணின் அறையிலிருந்து அக்குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் காணப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் முதற்கட்டத் தடயங்களைக் கொண்டு, மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியச் சடங்கின் ஒரு பகுதியாகக் குழந்தையின் வாயை மூடி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement

பக்கத்து அறையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட தகவலறிந்ததும், ஆத்திரமடைந்த குழந்தையின் உறவினர்களும் பொதுமக்களும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி டெல்லி சாலையை மறித்துப் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in