நண்பர்களுடன் ஜாலியாக கடலில் இறங்கிய 19 வயது கல்லூரி மாணவர்.. ஒரு நொடியில் வந்த அந்த ராட்சத அலையால் நிகழ்ந்த அதிர்ச்சி.. 2 ஹெலிகாப்டர்களுடன் நடக்கும் தீவிர தேடுதல் வேட்டை..!! – cinefeeds
Connect with us

CRIME

நண்பர்களுடன் ஜாலியாக கடலில் இறங்கிய 19 வயது கல்லூரி மாணவர்.. ஒரு நொடியில் வந்த அந்த ராட்சத அலையால் நிகழ்ந்த அதிர்ச்சி.. 2 ஹெலிகாப்டர்களுடன் நடக்கும் தீவிர தேடுதல் வேட்டை..!!

Published

on

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற முதலாம் ஆண்டு பி.காம் கல்லூரி மாணவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் லங்கபள்ளி புல்லையா கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் பயின்று வரும் 19 வயதான சையத் ஜாஹித் ராசா சனிக்கிழமை மதியம் தனது நண்பர்களுடன் ருஷிகொண்டா கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

கடற்கரையில் நண்பர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த ஜாஹித் ராசா, பின்னர் நான்கு இளைஞர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கிக் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வந்த ராட்சத கடல் அலையில் சிக்கிய ஜாஹித் ராசா, ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அங்கிருந்த உயிர்காப்பாளர்கள் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

Advertisement

தகவலறிந்ததும் உயிர்காப்பாளர்களும் காவல்துறையினரும் படகுகள் மூலம் சனிக்கிழமை இரவு வரை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தியபோதிலும், மாணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு கப்பலின் உதவியுடன் கடலோரக் காவல்படையினர் மற்றும் அதிகாரிகள் மாயமான மாணவர் ஜாஹித் ராசாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in