LATEST NEWS
அப்படிப்போடு..! பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை… கேரள முதலமைச்சர் எச்சரிக்கை..!!!
கேரள மாநிலத்தில் பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களைப் பராமரிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
வயதான காலத்தில் பெற்றோர்கள் கைவிடப்படுவதைத் தடுக்கும் நோக்கில், இத்தகைய கடுமையான தண்டனையை உள்ளடக்கிய புதிய சட்ட மசோதாவை கேரள அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தச் சட்ட மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், பெற்றோரைப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகள் மீது அளிக்கப்படும் புகார்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
