“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” தாயை இழந்த 16 வயது தங்கைக்கு சொந்த அண்ணனே செய்த துரோகம்.. 1 மாதமாக மிரட்டி பலமுறை நடந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” தாயை இழந்த 16 வயது தங்கைக்கு சொந்த அண்ணனே செய்த துரோகம்.. 1 மாதமாக மிரட்டி பலமுறை நடந்த கொடூரம்.. பகீர் பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை, அண்ணன் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் தாய் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட அச்சிறுமியின் மூத்த சகோதரர், கடந்த ஒரு மாத காலமாகத் தனது தங்கையை மிரட்டிப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இந்தக் கொடூரம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாகவும் அந்தச் சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.

அண்ணனின் தொடர் மிரட்டலாலும், சித்திரவதையாலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தச் சிறுமி, ஒருகட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமையன்று காவல் நிலையத்தை நாடினார். தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அவர் காவல்துறையினரிடம் கண்ணீருடன் புகார் அளித்தார்.

Advertisement

சிறுமியின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், உடனடியாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட அண்ணனைக் கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவரை அரசுக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாதுகாப்பாக இருக்க வேண்டிய சொந்த சகோதரனே தங்கையின் வாழ்க்கையைச் சீரழித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in