“அந்த கருப்பு ஆடுகள் யார்? ” மாமூல் நின்றதால் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி… பெயரும் ஆதாரமும் என்னிடம் உள்ளது என வைகோ பரபரப்புப் பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்த கருப்பு ஆடுகள் யார்? ” மாமூல் நின்றதால் தவெக ஆட்சியைக் கவிழ்க்க சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி… பெயரும் ஆதாரமும் என்னிடம் உள்ளது என வைகோ பரபரப்புப் பேச்சு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை முடக்கவும், கவிழ்க்கவும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் சதி செய்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “வைகோ இன் பார்லிமெண்ட்” என்ற நூலின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வைத் தொடர்ந்து, “கவிக்கடல் கண்ணதாசன்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியபோதே வைகோ இந்தப் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Advertisement

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பிறகு, முன்பு வழக்கமாக லட்சக்கணக்கில் கிடைத்து வந்த மாமூல் பணம் முழுவதுமாக நின்றுவிட்டதாக வைகோ குறிப்பிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சில ஐஏஎஸ் அதிகாரிகள், தற்போதைய அரசுக்கு எதிராகச் செயல்பட்டு ஆட்சியை முடக்கவும் கவிழ்க்கவும் முயற்சிப்பதாக அவர் சாடினார்.

அரசுக்கு எதிராகச் சதி செய்யும் அந்த ஐஏஎஸ் அதிகாரிகள் யார் யார் என்ற பெயர்ப் பட்டியலும், அதற்கான ஏராளமான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்த வைகோ, தற்போதைய சூழலில் அவர்களின் பெயர்களைப் பகிரங்கமாக வெளியிட விரும்பவில்லை என்றார். மேலும், மக்களின் ஆதரவோடு அமைந்துள்ள இந்த ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் அதிகாரிகளின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in