LATEST NEWS
விஜய்க்கு நெருக்கடி..! “தெறி” பட பாணியில் தவெக MLA உருவபொம்மையை பாலத்தில் தொங்கவிட்ட திமுகவினர்.. வந்தவாசியில் உச்சக்கட்ட பரபரப்பு…!!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி திமுக மாவட்ட மாணவரணி சார்பில் இன்று (நவ.25) நூதன போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது, ‘தெறி’ திரைப்படத்தில் குற்றவாளியை நடிகர் விஜய் பாலத்தில் தொங்கவிடுவது போன்ற காட்சியை நினைவுபடுத்தும் விதமாக, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் உருவபொம்மையை அங்கிருந்த பாலத்தில் தொங்கவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த உருவபொம்மையை உடனடியாக அகற்றி மீட்டனர். மேலும், அனுமதியின்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
