LATEST NEWS
“தம்பி அடுத்த வாரம் நேரில் ஆஜராகணும்” வெளிநாட்டில் பதுங்கிய ரத்தீசுக்கு விழுந்த இடி.. அதிரடியாக சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை..!!
ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் ரத்தீசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் மற்றும் தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, இந்த மெகா முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகின.
இந்த வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ரத்தீஷ் வெளிநாடுகளில் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு எதிராக ஏற்கனவே ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் மற்றும் சர்வதேச போலீசின் உதவியுடன் ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ரத்தீசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் பிறப்பித்துள்ளனர். வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ரத்தீஷின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அந்தச் சம்மனை அவரது குடும்பத்தினரிடம் வழங்கியுள்ளனர்.
