“தமிழ்நாட்டுக்கு வந்தா தூக்கிருவாங்க” கோடி ரூபாய் முதலீடு… 5 ஆண்டுகள் பாதுகாப்பு… தவெக அரசுக்கு பயந்து ரத்தீஷ் எடுத்த அதிரடி முடிவு..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“தமிழ்நாட்டுக்கு வந்தா தூக்கிருவாங்க” கோடி ரூபாய் முதலீடு… 5 ஆண்டுகள் பாதுகாப்பு… தவெக அரசுக்கு பயந்து ரத்தீஷ் எடுத்த அதிரடி முடிவு..!!

Published

on

தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ், தற்போதைய அரசியல் சூழலில் வெளிநாட்டிலேயே தங்கிவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் முறைகேடு புகார்கள் மற்றும் மத்திய அமலாக்கத் துறை விசாரணை வளையத்திற்குள் இருக்கும் அவர், ஏற்கனவே துபாய் நாட்டின் ‘கோல்டன் விசா’ பாதுகாப்பில் தங்கியுள்ளார். இந்த விசாவின் விதிமுறைகளின்படி, அவர் தடையின்றி அங்கு வசிக்க முடியும் என்பதால், ஒரு வருடத்திற்கு இந்தியா வர வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

துபாயைத் தொடர்ந்து, அவர் ஐரோப்பிய நாடான ‘லக்ஸம்பர்க்’கிற்குத் தனது இருப்பிடத்தை மாற்றத் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. லக்ஸம்பர்க் நாட்டின் முதலீட்டு விதிமுறைகளின்படி, சுமார் ₹5.5 கோடி செலுத்தி முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு அங்கு தங்குவதற்கான குடியுரிமை வாய்ப்பைப் பெற முடியும். இந்தச் சிறப்பு அனுமதியைப் பெறுவதன் மூலம், விசா எதுவும் தேவையின்றி 29 ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாகப் பயணம் செய்ய முடியும் என்பதால், அவர் இந்த லக்ஸம்பர்க் குடியுரிமைக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தமிழ்நாட்டில் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தவெக அரசு முடியும் வரை தமிழகம் திரும்பும் எண்ணம் ரத்தீஷுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. ரத்தீஷ் பிடிபட்டால் அது நேரடியாகப் பல முக்கியப் புள்ளிகளுக்குச் சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால், லக்ஸம்பர்க் நாட்டுக்குச் சென்று தலைமறைவாக இருக்க மேலிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படும் வேளையில், அவரைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதில் தற்போதைய தமிழக அரசு உறுதியாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in