“நமக்கு 2 புள்ளைங்க இருக்குடி வாடி” கண்ணீர் விட்டு கதறிய கணவன்… 20 வயசு காதலனை கட்டிப்பிடித்து வர மறுத்த மனைவி… பெரும் பரபரப்பு சம்பவம்..!! – cinefeeds
Connect with us

Uncategorized

“நமக்கு 2 புள்ளைங்க இருக்குடி வாடி” கண்ணீர் விட்டு கதறிய கணவன்… 20 வயசு காதலனை கட்டிப்பிடித்து வர மறுத்த மனைவி… பெரும் பரபரப்பு சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ரயில் நிலையத்தில், இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தன் கணவரைத் தவிக்கவிட்டு, 20 வயது இளைஞரைச் சந்திக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் சந்திப்பைக் கண்டறிந்த பெண்ணின் கணவர், சம்பவ இடத்திற்கே நேரில் வந்து இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நமக்கு இரண்டு பெரிய குழந்தைகள் இருக்கிறார்கள், குடும்பத்திற்காக தயவுசெய்து வீட்டுக்கு வா” என்று கணவர் கண்ணீர் விட்டு மன்றாடியும், அந்தப் பெண் அதைக் சிறிதும் பொருட்படுத்தவில்லை. மாறாக, அந்த வாலிபரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டு “நான் இவருடன்தான் வாழ்வேன்” என அடம்பிடித்துள்ளார். அந்த 20 வயது இளைஞரும் பெண்ணை விட்டுத்தர மறுத்து, அவரையே திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியதால் அங்குப் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement

பொதுமக்கள் முன்னிலையில் நீண்ட நேரமாக நடந்த இந்த நாடகத்தைத் தொடர்ந்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குடும்பத்தையும் குழந்தைகளையும் மறந்து வாலிபருடன் செல்ல பிடிவாதம் பிடித்த பெண் மற்றும் அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in