LATEST NEWS
“‘புரட்சித் தலைவி’ பட்டம் த்ரிஷாவுக்கா..? கோர்ட்டுக்கு இழுப்பேன்..!” ஜெ. தீபா விட்ட அதிரடி எச்சரிக்கை.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சொந்தமான ‘புரட்சித் தலைவி’ மற்றும் ‘இரும்புப் பெண்மணி’ ஆகிய பட்டங்களை நடிகை த்ரிஷா பெயருடன் இணைத்து ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ எனப் பயன்படுத்துவதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெ. தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியலில் ‘இரும்புப் பெண்மணி’ மற்றும் ‘புரட்சித் தலைவி’ என்றால் அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒருவரை மட்டுமே குறிக்கும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சினிமா பிரபலம் என்ற முறையில் மட்டுமே மற்றவர்கள் இத்தகைய பட்டங்களைப் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜெயலலிதாவுக்குப் பிறகு அந்தப் பெயர்களை வேறு ஒருவருக்குச் சூட்டி அமைப்புகள் தொடங்கப்பட்டிருப்பதைக் கண்டு, அவரது உண்மையான தொண்டர்கள் மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பதாகவும் ஜெ. தீபா வேதனை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்ற அடிப்படையில், அவரது அடையாளத்தையும் புகழையும் சிதைக்கும் இத்தகைய செயல்களைத் தன்னால் ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது எனவும், சம்பந்தப்பட்ட பேரவை மீது உடனடியாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
