LATEST NEWS
“முதலில் ராஜினாமா, அப்புறம்தான் கைது..” டேமேஜை குறைக்க கட்சி மேலிடம் போட்ட அதிரடி பிளான்.. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் வெளியான பரபரப்பு தகவல்..!!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புகார் தொடர்பான விசாரணை வேகமெடுத்துள்ள சூழலில், அருள் விக்னேஷ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போதே கைது செய்யப்பட்டால் அது கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கட்சி மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது. எனவே, முதலில் அவரை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, அதன்பிறகு கைது நடவடிக்கை மேற்கொண்டால் அரசியல் ரீதியான ‘டேமேஜை’ ஓரளவிற்குக் குறைக்க முடியும் என மேலிடம் கணக்குப் போடுவதாகத் தெரிகிறது.
இதன் காரணமாகவே, குற்றச்சாட்டு எழுந்து நாட்களாகியும் அருள் விக்னேஷைக் கைது செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு திட்டமிட்டுத் தாமதப்படுத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்துப் புகார்கள் எழுந்து நெருக்கடி முற்றியுள்ள நிலையில், அருள் விக்னேஷின் ராஜினாமா மற்றும் கைது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
