CRIME
“நான் மாமா மகனைக் காதலிக்கிறேன்..” தந்தையிடம் மகள் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அடுத்த நொடியே வீட்டுக்குள் நடந்த கொடூரம்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில், தனது மாமாவின் மகனைக் காதலிப்பதாகத் தந்தையிடம் கூறிய 19 வயது இளம்பெண்ணை, நிச்சயதார்த்தத்திற்கு முந்தைய நாள் தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஆணவக் கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிலாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்யாணி என்ற இளம்பெண்ணுக்கு, அவரது குடும்பத்தினர் வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயித்திருந்த நிலையில், மறுநாள் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. இந்தச் சூழலில், தனது தாய்மாமனின் மகனைத் தான் காதலிப்பதாக கல்யாணி தனது தந்தை கைலாஸ் அதேவிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டுக் கடும் ஆத்திரமடைந்த தந்தை, கல்யாணியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இந்தக் கொலையை மறைப்பதற்காக கல்யாணி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய கைலாஸ் அதே, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவசர அவசரமாக இறுதிச் சடங்குகளையும் செய்து முடித்துள்ளார். ஆனால், நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் இளம்பெண் திடீரென உயிரிழந்ததும், இறுதிச் சடங்குகள் அவசரமாக நடத்தப்பட்ட விதத்தாலும் அப்பகுதி மக்களுக்கும் உறவினர்களுக்கும் பலத்த சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து காவல்துறையினரின் விசாரணைக்குச் சென்றுள்ளது.
