“திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்” தீபம் ஏற்றினீர்களா? இல்லையா?.. மதுரை கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி… கலெக்டர் கொடுத்த ஷாக் ட்விஸ்ட்…!! – cinefeeds
Connect with us

DEVOTIONAL

“திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்” தீபம் ஏற்றினீர்களா? இல்லையா?.. மதுரை கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி… கலெக்டர் கொடுத்த ஷாக் ட்விஸ்ட்…!!

Published

on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாகப் போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில், நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாமல், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதாகக் கூறி, மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

விசாரணையின் போது, மதுரை மாவட்ட கலெக்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மிகவும் கடுமையான தொனியில் கேள்விகளை எழுப்பினார். “திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றினீர்களா? இல்லையா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி, தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் மற்றும் ஐஜி ஆகியோரின் பெயர்கள் என்னவென்றும் வினவினார். இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in