LATEST NEWS
“பேரதிர்ச்சியும்.. பேரச்சமும் அளிக்கிறது..” சமூக நல்லிணக்கத்தை விட உச்ச நீதிமன்றத்தின் ‘ஈகோ’ பெரிதா..? திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து திருமாவளவன் காட்டம்..!!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பேரதிர்ச்சியையும், பேரச்சத்தையும் அளிக்கிறது எனத் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தனது X சமூக வலைத்தளப் பதிவில், தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். எத்தனையோ தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள நிலையில், ஆத்திரப்படாத உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், சமூக நல்லிணக்கத்தை விடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோதான் முதன்மையானதா எனவும் திருமாவளவன் கடுமையாகச் சாடியுள்ளார்.
