செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் பகீர்..! “தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்து ரூ.2 லட்சம் பேரம்” SP அலுவலகத்தில் இளைஞர்கள் பரபரப்பு புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் பகீர்..! “தலைகீழாகத் தொங்கவிட்டு அடித்து ரூ.2 லட்சம் பேரம்” SP அலுவலகத்தில் இளைஞர்கள் பரபரப்பு புகார்..!!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கில், விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் தங்களைக் கடுமையாகத் துன்புறுத்தியதாக 3 இளைஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்புப் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்குப் பதிலாக, அப்பாவி இளைஞர்களான தங்களைச் சிக்க வைக்கப் போலீசார் முயற்சிப்பதாக அவர்கள் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக, சிறுமி மாயமான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டால் ரூ. 2 லட்சம் பணம் தருவதாக சிபிசிஐடி போலீசார் ஆசை வார்த்தை கூறி வற்புறுத்தியதாக அந்த இளைஞர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதற்குத் தாங்கள் மறுப்புத் தெரிவித்ததால், தங்களது கை, கால்களைக் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு போலீசார் கொடூரமாகத் தாக்கியதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும், விசாரணை என்ற பெயரில் நடந்த இந்தத் தாக்குதல் மற்றும் பணம் பேரம் பேசிய விவகாரங்களை வெளியில் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது எனப் போலீசார் தங்களை மிரட்டியதாகவும் அந்த இளைஞர்கள் புகாரில் கூறியுள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சிபிசிஐடி போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in