LATEST NEWS
“யாரு கிட்ட வந்து வாலாட்டுத்த..?” குழந்தைகளை மயக்கி அழைத்துச் செல்ல முயன்ற சாமியார்… அடுத்த நொடியே ஓட ஓட விரட்டி புரட்டியெடுத்த பெண்ணின் துணிச்சலான வீடியோ வைரல்..!!!
குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சாமியார் ஒருவர், ஒரு வீட்டிலிருந்த குழந்தைகளைத் தனது பேச்சால் மயக்கித் தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்த குழந்தைகள் சாமியாருடன் செல்வதைக் கண்ட குடும்பத்தினர், உடனடியாக அதிர்ச்சியடைந்து குழந்தைகளை மீட்பதற்காக அவரை வழிமறித்துத் தடுக்க முயன்றனர்.
குடும்பத்தினர் தன்னைத் தடுப்பதைக் கண்ட அந்தச் சாமியார், ஆத்திரமடைந்து தன்னிடமிருந்த ஒரு பாம்பை அவர்கள் மீது ஏவிவிட்டதாகக் கூறப்படுகிறது. சற்றும் எதிர்பாராத இந்தச் செயலால் அங்கிருந்தவர்கள் நிலைகுலைந்து அலறியடித்து ஓடினர்; இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது.
இதற்கிடையில், அங்கிருந்த பெண் ஒருவருக்குத் திடீரென ஆவேசம் ஏற்பட்ட நிலையில், அவர் சற்றும் அஞ்சாமல் அந்தச் சாமியாரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த வினோதமான மற்றும் திகிலூட்டும் சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளைக் கடத்த முயன்ற அந்தச் சாமியார் குறித்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
