LATEST NEWS
“எரித்துச் சாம்பலாக்கி விட்டது தவெக அரசு..”கனிமொழியின் ஆவேசப் பேச்சால் அனல் பறக்கும் அரசியல் களம்..!!
தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக அரசால் அழிக்கப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதலாக, திராவிட இயக்கம் தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வந்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
பல ஆண்டுகளாகப் போராடி நிலைநிறுத்தப்பட்ட அந்த உரிமைகளைத் தற்போதைய தவெக அரசு இன்று முழுமையாக எரித்துச் சாம்பலாக்கி விட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
