பள்ளி சிறுமிகளை குறிவைத்து தாக்கும் இளைஞ்சன்..?? வெளிமாநிலங்களுக்கு விற்பனை ..?? தாயும் மகனும் செய்யும் தொழில்.. பரபரப்பு தகவல் .. – cinefeeds
Connect with us

TRENDING

பள்ளி சிறுமிகளை குறிவைத்து தாக்கும் இளைஞ்சன்..?? வெளிமாநிலங்களுக்கு விற்பனை ..?? தாயும் மகனும் செய்யும் தொழில்.. பரபரப்பு தகவல் ..

Published

on

செங்கல்பட்டு , கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியில் வசித்து வரும் ஒரு 17 வயது சிறுமி கடந்த மாதம் 21 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆள் இந்தியா டிராவல் ஏஜன்சி கணேஷ் என்பவரை கைது செய்தனர். விசாரணையின் காவல் துறைக்கு பெரும் அதிர்ச்சி காத்து கொண்டு இருந்தது. அவரின் விசாரணை முடிவில் கணேஷின் தாயார் சுகாசினி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண்களை வைத்து பிழைப்பு நடதும் எஜண்ட்களோடு தொடர்பு வைத்து கொண்டு பாலியல் தொழிலுக்கு பெண்களை விற்பவர்.

மேலும் தனது மகன் கணேஷை பள்ளி சிறுமிகளை காதல் வசிய படுத்த சொல்லி அவர்களை கல்யாணம் செய்துவிடலாம் என்று ஆசை காட்டி வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து சம்பாரிப்பது இவர்களின் வேலை என்பது தெரியவந்தது. மேலும் கணேஷின் விசாரணையின் சிறுமி குஜராத்தில் பாலியல் தொழில் செய்யும் இடத்தில் விற்கப்பட்டு இருக்கிறாள் என்பது தெரியவந்தது, அதனால் சிறுமியை காப்பாற்றிய போலீசார்கள் கணேஷின் தாயார் சுகாசினியை தேடி வருகின்றனர்.

Advertisement

மேலும் இவர்கள் பள்ளியில் படிக்கும் சிறுமிகளை குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி அவர்களை கடத்தி விற்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இதுவரை நிறைய பெண்களை கடத்தி இருக்கிறார்கள் என்பது தெரியவந்து உள்ளது. தற்பொழுது கணேஷ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யபட்டது சிறையில் உள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in