TRENDING
6 கல்யாணம் ’10 கள்ளக்காதலிகளுடன் உல்லாச வாழ்க்கையை’.. வாழ்ந்த மாற்றுத்திறனாளி! சேலத்தில் வெளிவந்த பகீர் தகவல்…?
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த அஷ்ரப் அலி இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார் அந்தவகையில் இன்டெர்வியூக்கு பெங்களூர் சென்றுவிட்டு பஸ்ஸில் வரும் போது அருகில் இருகண்கள் தெரியாத மாற்றுத்திறனாளியான டேவிட் என்பவர் அமர்ந்த்திருந்தார். பின்னர் பஸ்ஸில் பேசிக்கொண்டு வந்தனர். பாஸ் பழக்கத்தினால் டேவிட்டுக்கு வேலைவாங்கி தருவதாக கூறி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வாங்கியுள்ளார்.
நீண்டநாட்கள் ஆகியும் வேலையும் கிடைக்கவில்லை கொடுத்த பணமும் வரவில்லை இதனால் வெறுத்துப்போன அஷ்ரப் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் டேவிட்டை போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது.
எனக்கு கண்பார்வை இல்லாவிட்டாலும் அதிகப்படியான பஸ்களில் பயணம் செய்வேன் குறிப்பாக பெண்கள் பக்கத்தில் அமர்ந்துகொள்வேன் அவர்களும் கண்ணு தெரியவர்தானே என்று இருப்பார்கள். பின்னர் நைசாக பேச்சுக்கொடுத்து என் பண்றீங்க என்று கேட்டு எனக்கு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் எல்லாம் நெருக்கம் என்று கூறி உங்களுக்கு வேலைவாங்கி தருகிறேன் என சொல்லி அவர்களின் செல் போன் நெம்பரை வாங்கிக்கொண்டு வீட்டிற்க்கே சென்று பேசுவேன் இதில் கடந்த ஆறுவருடத்தில் 62 பேரிடம் 50 லட்ச ரூபாய்க்கும் மேலாக வாங்கியுள்ளேன்.
இந்த மோசடி பணத்தில் சுமார் ஆறு பெண்களை திருமணம் செய்துள்ளேன் இதில் ஐந்து பெண்கள் என்னை விட்டு சென்றுவிட்டார்கள் தற்போது ஒரு பெண்ணுடன் வாழ்ந்துவருகிறேன். இதை தவிர பத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் தகாத உறவில் இருந்து வருகிறேன் மேலும் இப்பணத்தை அவர்களிடம் கொடுத்து ஜாலியாக இருப்பேன் என்று அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளார்.
மேலும் டேவிட்டை சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.
