LATEST NEWS
விஜே மகேஸ்வரியின் கணவரை பார்த்திருக்கீங்களா?….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. இதோ உங்களுக்காக….!!!!
தமிழ் சினிமாவில் தொகுப்பாளனியாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் விஜே மகேஸ்வரி. சன் மியூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இவர் தொகுப்பாளனியாக இருந்து வருகிறார். அதன் பிறகு தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தனது கணவரை விவாகரத்து செய்து தற்போது தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் பிக் பாஸ் 6-வது சீசனில் தற்போது கலந்து கொண்டுள்ளார் தொகுப்பாளனியாக இருந்த இவர் சீரியல்களில் நடித்து வந்தார். அப்போது திடீரென்று திருமணம் செய்து கொண்டார் திருமணம் தொடர்பாக ஒரு youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த இவர் தெரிவித்ததாவது “நான் மீடியாவில் நுழைந்த சில காலத்திலேயே எனக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். அப்போது அதைப்பற்றி புரிதல் எனக்கு இல்லை.
இருவருக்கும் மனப்பொருத்தம் கிடையாது. அது மட்டும் இல்லாமல் தன்னை சீரியலில் நடிக்க கூடாது என்று கூறினார்கள். பல தடைகள் விதித்தார்கள், எனது தாய்க்கு கூட என்னால் பணம் அனுப்ப முடியவில்லை. இதனால் சில வருடங்களில் நாங்கள் பிரிந்து விட்டோம். அதன் பிறகு எனது மகனின் நானே பார்த்துக் கொண்டு வருகின்றேன் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கணவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
