LATEST NEWS
நீண்ட நாளுக்கு பிறகு….! “விரைவில் நல்ல செய்தி சொல்லப்போகும் தனுஷ் – ஐஸ்வர்யா”….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர். அதன் பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என்று ஒரு கலக்கு கலக்கி வருகிறார். நடிகராக மட்டும் இல்லாமல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில். நானே வருவேன் திரைப்படமும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன். இந்த திரைப்படத்தை வெளியிட்டதன் காரணமாக. இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. தற்போது அடுத்த கட்டமைப்பு பணியில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி திரை வாழ்க்கையில் அவர் சக்சஸ் ஆக இருந்தாலும். குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் தற்போது பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். இவர் தனது மனைவி விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார் . ஆனால் முறையாக இவர்கள் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் பிரிவு ரசிகர்கள் இடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தாரும் சரி, ரசிகர்களும் சரி மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் . இந்நிலையில் விரைவில் இவர்கள் இருவரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தங்கள் பிள்ளைகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே தனுஷ் போயாஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்ட வீடு கட்டி வருகிறார்.
அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் வரும் ஜனவரி மாதம் இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில். அந்த புது வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கும் போது தனது மனைவியுடன் இவர் ஒன்று சேர்ந்து செல்வார் என்று பலரும் கூறி வருகின்றனர். அது நடந்தால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
