LATEST NEWS
10வது படிக்கும்போதே ஹோட்டல் வேலைக்குச் சென்ற சமந்தா…. முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. கேட்டா ஆடி போயிருவீங்க….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் முதன்முதலில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார். இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்த நிலையில் இருவருக்கும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் ஒன்றாக பல வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு படங்களில் பிசியான சமந்தா சமீபத்தில் மயோசிட்டி சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு வருவதாக உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டார். அதன் பிறகு சற்று உடல் நலம் தேறியதாக கூறிய சமந்தா தற்போது ஆயுர்வேத மருத்துவர்களால் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நடிகை சமந்தா பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த சமந்தா தன்னுடைய முதல் சம்பளம் குறித்தும் பேசியுள்ளார். அதில் தான் பத்தாவது படிக்கும் போது ஹோட்டலில் வேலை செய்து வந்ததாகவும் அப்போது அந்த வேலைக்காக 500 ரூபாய் சம்பளமாக கிடைத்ததாகவும் சமந்தா கூறியுள்ளார். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
#Samantha's recent chat session with her followers!! pic.twitter.com/cwJpOCz1z4
— Viral Briyani (@Mysteri13472103) April 18, 2022
