LATEST NEWS
“முழு லிஸ்டை குடுங்க” திமுகவின் அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்..? 16 துறைகளில் கட்சி நிதி வசூல்..? சாட்டையை சுழற்றிய முதல்வர்… தலைவலியில் ஸ்டாலின்..!!
தமிழக சட்டமன்றத்தில் ‘கட்சி நிதி’ வசூல் தொடர்பாக முதல்வர் விஜய் எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் சுமார் 16 அரசுத் துறைகளில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த முழுமையான பட்டியலைத் தயார் செய்ய முதல்வர் விஜய் தனது செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்தெந்த துறைகளில் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது, யார் யார் அந்தப் பணத்தைக் கொடுத்தார்கள், அது யாரிடம் போய் சேர்ந்தது போன்ற முழு விவரங்களையும் சேகரிக்குமாறு கோட்டை வட்டார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார். தவெக அரசு காசு கொடுத்து வாக்கு வாங்கும் நச்சு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு மக்கள் சேவை செய்ய மட்டுமே தெரியுமே தவிர, கோயில் பணத்தையோ, கனிம வளங்களையோ அல்லது மக்கள் பணத்தையோ சுருட்டத் தெரியாது என்றும், கட்சி நிதி என்ற பெயரில் தவெகவினர் கொள்ளையடிப்பதில்லை என்றும் காட்டமாகப் பேசினார். தான் ஏதோ சினிமா சூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதலமைச்சராகிவிட்டது போன்ற பிம்பத்தை உருவாக்கச் சிலர் முயல்வதாகவும், இது ‘ரீல்’ அல்ல, ‘ரியல்’ என்றும் அவர் முழங்கினார்.
தவெக அரசின் இந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். அன்றைய தினம் தொடங்கிய இந்த அரசியல் மோதல் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் 16 துறைகளின் நிதி வசூல் பட்டியலைத் திரட்டும் முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கை, கோட்டை அதிகாரிகள் மத்தியிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் தற்பொழுது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
