அம்மாடியோ 70 நாளில் இத்தனை லட்சம் சம்பளமா?…. பிக்பாஸில் இருந்து லட்சத்தை பெற்றுச்சென்ற போட்டியாளர் ஜனனி…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ 70 நாளில் இத்தனை லட்சம் சம்பளமா?…. பிக்பாஸில் இருந்து லட்சத்தை பெற்றுச்சென்ற போட்டியாளர் ஜனனி…..!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் கிட்டத்தட்ட 70 நாட்களை பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்துள்ளது. இதில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட 70 நாட்கள் ஆகியும் இன்னும் யாரும் விளையாடவே இல்லை என கமல்ஹாசன் கூறி அண்மையில் விமர்சித்தார்.

இதுவரை 12 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் நேற்று இலங்கை போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 70 நாட்கள் இருந்த ஜனனி ஒரு நாளைக்கு 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி கணக்கிட்டால் 70 நாட்களில் சுமார் 17 லட்சம் அளவிற்கு இவர் சம்பளமாக வாங்கி சென்று இருப்பது தெரிகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in