LATEST NEWS
அவர் சொல்றது எல்லாமே பொய்…. விவாகரத்துக்கு காரணமே இதுதான்…. உண்மையை உடைத்த பார்த்திபன் முன்னாள் மனைவி….!!!!
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்காக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார் பார்த்திபன்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தன்னுடைய முன்னாள் மனைவி குறித்து, என் முன்னாள் மனைவி சீதாவின் அதிக எதிர்பார்ப்பால்தான் எங்களுக்கு விவாகரத்து ஆனது, முதலில் என்னிடம் காதலை கூறியது சீதா தான் என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகை சீதா, கணவரிடம் அதிக எதிர்பார்ப்பு இருப்பதில் என்ன தவறு இருக்கிறது. பார்த்திபன் சொல்வது பொய், அவர்தான் எனக்கு போன் செய்து அந்த மூன்று வார்த்தையை சொல்ல சொல்வார், எனக்கும் அவரைப் பிடித்ததால் நானும் காதலை சொல்லிவிட்டேன் என்று சீதா கூறியுள்ளார்.
