LATEST NEWS
ராமராஜன் – நளினி தம்பதியின் மகனை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத குடும்ப புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து இருக்கும் நடிகர் தான் ராமராஜன். கரகாட்டக்காரன் திரைப்படம் தற்போதும் டிவியில் ஒளிபரப்பாகினால் அதனை பார்ப்பவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். நடிகர் ராமராஜன், கனகா, கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கரகாட்டக்காரன். ராமராஜன் ஹீரோவாக மட்டுமல்லாமல் பல படங்களையும் இயக்கியுள்ளார்.
இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கும் ராமராஜன் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ராமராஜன் மற்றும் நளினி தம்பதிக்கு அருணா சுப்பிரமணியம் மற்றும் அருண் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவரின் மகள் அருணாவை பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. தற்போது ராமராஜன் மற்றும் நளினியின் மகன் அருனுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
