நடிகை தமன்னாவின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?…. அவரே கொடுத்த டிப்ஸ்….. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை தமன்னாவின் அழகின் ரகசியம் என்ன தெரியுமா?…. அவரே கொடுத்த டிப்ஸ்….. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க….!!!

Published

on

ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னா அவரின் அழகுக்கான ரகசியம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில், சந்தனம், காபித்தூள் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் பளபளவென இருக்கும். தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் ஐ பயன்படுத்தினால் முகம் ஜொலிக்கும் என்று டிப்ஸ் கொடுத்து உள்ள அவர் இது அவரின் தாய் சொல்லிக் கொடுத்த டிப்ஸ் என்றும் ரசிகர்களை இதனை பின்பற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in