LATEST NEWS
வாரிசு திரைப்படம் பார்க்க மனைவியுடன் வந்த விஜய்…. தியேட்டரில் காத்திருந்த அதிர்ச்சி…. கோபப்பட்ட தளபதி….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் அதாவது இன்று தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இவர்களின் திரைப்படங்கள் தனித்தனியாக வந்தாலே திருவிழா கோலமாக இருக்கும். தற்போது ஒரே நாளில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதனிடையே விஜய் தனக்கு நெருக்கமானவர்களின் விசேஷங்கள் மற்றும் பட விழாவுக்கு மனைவி சங்கீதாவுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் சமீபத்தில் பிரியா ஆட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சங்கீதா கலந்து கொள்ளாததால் இருவரும் செய்து பிரிய உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
இதனைத் தொடர்ந்து மகன் மற்றும் மகள் படிப்புக்காக அமெரிக்காவில் இருந்த சங்கீதா தற்போது இந்தியா திரும்பி உள்ள நிலையில் விஜய்யுடன் சேர்ந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் திரையரங்கில் வாரிசு படத்தை பார்ப்பதற்கு நேற்று இரவு சென்றுள்ளார். ஆனால் அங்கு படம் போட இரண்டு மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. அதன் பிறகு விஜய் மனைவியுடன் படம் பார்த்துவிட்டு இரவு 8.30 மணிக்கு வீடு திரும்பினார். படக்குழுவினர் சொன்ன நேரத்திற்கு மனைவியுடன் விஜய் வந்தபோதிலும் சில காரணங்களால் படம் வெளியிடுவதற்கு இரண்டு மணி நேரம் தாமதம் ஆனதால் விஜய் கோபப்பட்டதாக கூறப்படுகிறது.
