CRIME
“எனக்கே துரோகம் பண்ணுறீயா..?” பழிவாங்க காதலியின் 39 வினாடி அந்தரங்க வீடியோவை ஆபீசுக்கு அனுப்பிய கொடூரன்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பு..!!
டேட்டிங் செயலி மூலம் பழகித் துரோகம் இழைத்ததாகக் கூறி, தனது முன்னாள் காதலியின் 39 வினாடி அந்தரங்க வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை அவர் வேலை செய்யும் பள்ளியின் சக ஊழியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிப் பழிவாங்கிய 40 வயது நபருக்குச் சிங்கப்பூர் நீதிமன்றம் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 1,500 சிங்கப்பூர் டாலர் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரியில் பழகத் தொடங்கிய இந்த ஜோடி, ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மே மாதம் அந்தப் பெண்ணுக்கு வேறொரு சக ஊழியருடன் தொடர்பு இருப்பதாக அந்த நபருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, தனக்கு வேறு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டதை அந்த நபர் தனது கைபேசியில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தத் துரோகத்தால் ஆத்திரமடைந்த அந்த நபர், பாதிக்கப்பட்ட பெண் நிர்வாக ஊழியராகப் பணிபுரியும் பள்ளியின் சக ஊழியர்கள் மற்றும் நான்கு மேற்பார்வையாளர்களின் பணி மின்னஞ்சல் முகவரிகளை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்துள்ளார். பின்னர், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT-ஐப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் துரோகத்தை விவரிக்கும் ஒரு மின்னஞ்சலை வரைந்துள்ளார். கடந்த ஜூன் 27 அதிகாலையில், அந்தப் பெண்ணின் ஆடியோ வாக்குமூலம் மற்றும் 39 வினாடி அந்தரங்க வீடியோவை இணைத்து இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சல்கள் அலுவலகப் பகிர்வு மூலம் சுமார் 20 பேரைச் சென்றடைந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அதிகாலை 5:29 மணிக்கு அளித்த புகாரின் பேரில், அந்த நபர் அன்றே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தால் கடுமையான மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளான அந்தப் பெண், ஆரம்பத்தில் வேறு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு, பின்னர் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். நீதிமன்ற விசாரணையின் போது, மின்னஞ்சல் பெற்றவர்களில் பலர் அந்த வீடியோவைத் திறக்காமல் நீக்கிவிட்டதாகப் பாதுகாப்புத் தரப்பு வாதிட்ட போதிலும், இந்தச் செயல் முழுக்க முழுக்கப் பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டுச் செய்யப்பட்டது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 22 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த நபருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தனிநபர் பாதுகாப்புக் கருதி இவர்களின் அடையாளங்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.
