LATEST NEWS
விஜய் டிவி Vs youtube…. அதிக வருமானம் எதில் வருகிறது?…. விஜே மணிமேகலை ஓபன் டாக்….!!!!
சன் மியூசிக் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளனியாக வளம் வந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் விஜே மணிமேகலை. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.பிரியா வீடு மற்றும் வெட்டி பேச்சு உள்ளிட்ட இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதரிடையே மணிமேகலை தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஹுசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை மணிமேகலை தொகுத்து வழங்கினார்.பின்னர் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை சீசன் 1 நிகழ்ச்சியில் மணிமேகலை தனது கணவருடன் போட்டியாளராக கலந்து கொண்டார். பின்னர் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக மாறினார் மணிமேகலை.இருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் தான். அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
மணிமேகலை தனது கணவருடன் சொந்தமாக ஒரு youtube சேனலையும் நடத்தி வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 35 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அதிக வருமானம் வருவதை விஜய் டிவியா அல்லது youtube மூலமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மணிமேகலை யூடியூப் மூலம் தான் அதிக வருமானம் வருகிறது என்று பதில் அளித்துள்ளார்.
